வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  தெய்வநாயகேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  தெய்வநாயகேஸ்வரர்

அம்மனின் பெயர் :  கனககுசாம்பிகை

தல விருட்சம்     :   மரமல்லிகை

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

முகவரி : அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில், திருஇலம்பையங்கோட்டூர்- 631 553. காஞ்சிபுரம் மாவட்டம். 
Ph: 044 - 2769 2412, 94448 65714


கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 246 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார். 

* மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள். இங்குள்ள தலவிநாயகர், குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

* தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: