வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்          :    அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோவில்(தேவூர்)

சிவனின் பெயர்           : தேவபுரீஸ்வரர் 

அம்மனின் பெயர்      :  மதுரபாஷினி, தேன் மொழியாள்

தல விருட்சம்              :   கல்வாழை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                         மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோவில்,தேவூர்-611 109, திருவாரூர் மாவட்டம்.Ph:04366 - 276 113, +91-94862 78810

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 148 வது தேவாரத்தலம் ஆகும்.

* வழிபட்டோர்: மாணிக்க வாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தல விநாயகரை பிரும்ம வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. மூன்று நிலை ராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம் "சோமாஸ்கந்த மூர்த்தி' தலமாகும். பிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா லிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

* சிறந்த குரு ஸ்தலமான இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் தேவபுரீஸ்வரரை வழிபாடு செய்வது சிறப்பு.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: