செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு கிருபாபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  கிருபாபுரீசுவரர்
(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)

அம்மனின் பெயர் :  மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)

தல விருட்சம்     :   மூங்கில் மரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை       

முகவரி : அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம்.Ph: 93456 60711

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 225 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது. 

* இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும். 

* பொல்லாப்பிள்ளையார் : இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சன்னதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: