ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்

அம்மனின் பெயர் :  தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி

தல விருட்சம்     :   கொன்றை

கோவில் திறக்கும் நேரம் : காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி 

முகவரி : அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்)திருக்கோவில், திருச்சோபுரம் - 608 801 தியாகவல்லி, கடலூர் மாவட்டம்.Ph: 94425 85845

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 217 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

* பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவனசக்கரவர்த்தி , அவர் மனைவி வழிபட்ட லிங்கம், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் உள்ளன.

* இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: