வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  மணிகண்டீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  மணிகண்டீஸ்வரர்

அம்மனின் பெயர் :  அஞ்சனாட்சி

தல விருட்சம்     :   வில்வம்


கோவில் திறக்கும் : காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில், 
திருமால்பூர்-631 053. வேலூர் மாவட்டம்.
Ph:04177 248 220, 93454 49339


கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. 
* சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் "செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்துடன் உள்ள தலம். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது.

* பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: