கோவில் பெயர் : அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர்
அம்மனின் பெயர் : மங்கள நாயகி
தல விருட்சம் : நெல்லிமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில், திருநெல்லிக்கா திருவாரூர் மாவட்டம்.Ph: 04369-237 507, 237 438.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 181 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவனை பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர், தேவலோக மரங்கள் வழிபாடு செய்துள்ளன.
* இத்தல இறைவன் சுயம்புலிங்கம் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும்.
* திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கோபம் குறையவும், குஷ்டரோகம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
0 Comments: