சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பாதாளேஸ்வரர், பாதாள வரதர்

அம்மனின் பெயர் :  அலங்காரவல்லி, அலங்கார நாயகி

தல விருட்சம்     :   வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 1 மணி வரை, 
                                                  மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் - 612 802. , திருவாரூர் மாவட்டம்
Ph: 04374-264 586, 4374-275 441, 94421 75441.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 162 வது தேவாரத்தலம் ஆகும்.

*  மூலவர் சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசிவிஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர்.

* திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அலங்காரவல்லியை தரிசித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: