ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு பிரளயகாலேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)

அம்மனின் பெயர் :  அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)

தல விருட்சம்     :  செண்பகம்

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5 மணி 9 முதல் இரவு மணி வரை 

முகவரி : அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், 
பெண்ணாடம்-606 105 கடலூர் மாவட்டம்.Ph: 04143-222 788, 98425 64768

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 213 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.

* கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

* கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: