கோவில் பெயர் : அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சொர்ணகடேஸ்வரர்
அம்மனின் பெயர் : நீலமலர்க்கண்ணி
தல விருட்சம் : புன்னை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 9 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில், நெய்வணை- 607 201,விழுப்புரம் மாவட்டம்.Ph:04149 291 786
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 221 வது தேவாரத்தலம் ஆகும்.
* கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. அந்நேரத்தில் மட்டும் சிவன் நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி, மாறி தெரிகிறார். இது சிவனின் அரிய தரிசனம் ஆகும்.
* இங்குள்ள சிவனுக்கு வெண்ணெயப்பர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இங்குள்ள தல விநாயகர் வரசித்தி விநாயகர்.
* சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் செய்த பாவங்கள் நீங்கி ஞானம் கிடைக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
0 Comments: