ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்)

அம்மனின் பெயர் :  வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி)

தல விருட்சம்     :   வெள்ளெருக்கு

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 

முகவரி : அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) திருக்கோவில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம் -608 703 . 
கடலூர் மாவட்டம்.Ph: 0 4143-243 533, 93606 37784

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 215 வது தேவாரத்தலம் ஆகும்.

* மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்டநாயனார் அவதரித்த தலம். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள்'' என கூறிமறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது. மூலவர் திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

* பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: