கோவில் பெயர் : அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்),
கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்.
அம்மனின் பெயர் : கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம் : பனை
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோவில், திருப்பனங்காடு - 604410. திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம்.Ph: 2431 2807, 98435 68742
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 241 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள். கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.
* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. தலவிருட்சத்தை சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.
0 Comments: