சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஏடகநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் : ஏலவார்குழலி, சுகந்த குந்தளாபிகை

தல விருட்சம்     : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,
                              மாலை  4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம் - 624 234, மதுரை மாவட்டம்.Mobile No : 99432 61487
E-Mail:edaganaathaswami@gmail.com
Website:thiruvedagamedaganaathar.tinfo.in


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* 194 தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* சிவராத்திரியன்று பைரவர் பூஜை : எல்லாசிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு தான், இரவு நேரத்தில் நான்கு ஜாம அபிஷேகம், பூஜை நடைபெறும். ஆனால், திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர்

* திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப் படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: