ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : திருமுருகநாதர்

அம்மனின் பெயர் :  ஆவுடை நாயகி, மங்களாம்பிகை

தல விருட்சம்     : பாதிரிமரம்

கோவில் திறக்கும் நேரம் :காலை 5.30 மணி முதல் 12.45 மணி வரை, 
                   மாலை  3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை. 

முகவரி : அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில், அவிநாசி - 638 654, திருப்பூர் மாவட்டம்.Ph:04296- 273 507

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* கோயில் நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இதன் உள்ளே சென்றால், வலதுபுறம் வேடுவர் உருவங்கள் இரண்டு(ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலைவிலும் மற்றறொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்)உள்ளன. சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சன்னதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

* இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய்(சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்முகதீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: