வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு   வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்

அம்மனின் பெயர் :  வண்டார்குழலி, மகாகாளி

தல விருட்சம்     :   பலா

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 9 மணி வரை 
நடை திறந்து இருக்கும்

முகவரி : முகவரி : அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர்  திருக்கோவில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். Ph:0 4118-272 608.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 248 வது தேவாரத்தலம் ஆகும். 

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். 

* முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

* நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: