கோவில் பெயர் : அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்
அம்மனின் பெயர் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : வாழை மரம்
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம்.
Ph:044 2744 7139, 94428 11149
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 261 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம்.
* இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
0 Comments: