கோவில் பெயர் : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வேதபுரீஸ்வரர்
அம்மனின் பெயர் : பாலாம்பிகை
தல விருட்சம் : வெள்வேல மரம்
கோவில் திறக்கும் : காலை 6.30 மணி முதல் 12மணி வரை, மாலை4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம்.Ph:044-2627 2430, 2627 2487.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம்.
* இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.
* இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
0 Comments: