கோவில் பெயர் : அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர்)
அம்மனின் பெயர் : சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர் மாவட்டம் - 613 705.Ph:04366 - 262 239
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 177 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.
* சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
0 Comments: