ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  பக்தஜனேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,

அம்மனின் பெயர் :  மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி

தல விருட்சம்     :   நாவல்மரம்

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
 மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.  

முகவரி : அருள்மிகு பக்தஜனேசுவரர்  திருக்கோவில், திருநாவலூர் - 607 204, விழுப்புரம் மாவட்டம்.Ph:94861 50804, 94433 82945, 04149-224 391.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.

* இந்த பக்தஜனேசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. 

* சுந்தர மூர்த்தி சுவாமிகளை நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். 

* ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம். இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்த ஜனேசுவரரை வணங்கி தரிசித்த இறைவியாகிய மனோன்மணியை வணங்கி அம்பிகையின் சொல்படி சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.

* சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. 

* சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம். இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: