வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  வாலீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர்

அம்மனின் பெயர் :  இறையார்வளையம்மை

தல விருட்சம்     :   இலந்தை


கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது..

முகவரி : அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் , தூசி (Po)
 குரங்கணில்முட்டம் - 631 702.திருவண்ணாமலை மாவட்டம்.
 Ph 2724 20158, 99432 - 95467.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 238 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும்.

* பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், 
சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். 

* திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இங்குள்ள அம்பாளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர். வாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் குறைவில்லாத வாழ்வும், பிறப்பில்லாத நிலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

* பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளுக்கு குணமாக அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: