வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  திருக்கேதீச்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : மகாபலேஸ்வரர், 
பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்

அம்மனின் பெயர் :  கவுரி

தல விருட்சம்     : வன்னி மரம்

கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு திருக்கேதீச்வரர்  திருக்கோவில் மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம். இலங்கை.
போன்:0232233003, 0112360316, 0112582890, 0112586042

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 276 வது தேவாரத்தலம் ஆகும்.

கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது தோஷம் இருப்பின், பாலாவியில் நீராடி, கேதீச்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று ஐதீகம். பாலாவி தீர்த்தம், பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கும் மகா சக்தி படைத்தது. இங்கு நீராடி பித்ருபூஜை செய்தால், கயையில் பித்ரு பூஜை செய்த புண்ணியம் கிட்டும். சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன், இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால், மாதுவட்டா என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது, தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி, அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால், நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.

* ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: