புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோவில்

கோவில் பெயர் :  அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோவில் 

முருகன் பெயர்  :                    முருகன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 4 மணி முதல் 11.30 மணி வரை 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : 
ருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோவில் 
Administrative Officer
Haripad Devasom.
Haripad P.O 
Haripad
Ph: 04792410690


கோவில் சிறப்பு : 

* எல்லா மாத கார்த்திகை நட்சத்திரத்திலும் விசேஷ பூஜை உண்டு. ஆவணி, மார்கழி, சித்திரை மாதங்களில் பத்துநாள் விழா நடத்தப்படும்.

* பிரார்த்தனை திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம் நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். தலபெருமை: ஹரிப்பாடு முருகன் ஒருமுகம் கொண்டவர். எப்போதும் திருநீறு அல்லது சந்தனக்காப்பில் மிளிர்வார். கேரளாவில் இருப்பதால் முறையான பூஜைகள் உண்டு. கோயில் வாசலில் பெரிய மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் 70 அடி உயரமுடைய மிகப்பெரிய கொடிமரம் வரவேற்கும். ராஜகோபுரமும் இருக்கிறது. இக்கோபுரத்தின் கீழே பதிந்துள்ள காலடிகள் முருகனுடையதாகக் கருதப்படுகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் சாந்நித்யம் பெற்றதாக இக்கோயில் கருதப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோயில் ஒன்று இங்கிருந்தது. கி.பி.1096ல் இங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மூல விக்ரகத்தைத் தவிர மற்ற அனைத்தும் எரிந்து விட்டது. தற்போதைய கோயில் அதன்பிறகு எழுப்பப்பட்டது. முருகனுக்கு திருமணம் முடியும் முன்பே அமைந்தகோயில் என்பதால் வள்ளி, தெய்வானை இல்லை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: