புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் (திருத்தணி)

கோவில் பெயர் : அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 

முருகன் பெயர்  : சுப்பிரமணியசுவாமி

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் 
திருத்தணிகை - 631209 திருவள்ளூர் மாவட்டம். 
Ph: 044 2788 5303.  http://www.tirutanigaimurugan.tnhrce.in/


கோவில் சிறப்பு : 

* மாசிப் பெருந்திருவிழா - வள்ளி கல்யாணம் - 10 நாட்கள் திருவிழா - இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந்திருவிழா - தெய்வானை உற்சவம் -10 நாட்கள் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

* அதிசயத்தின் அடிப்படையில்: அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: