திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆம்ரவனேஸ்வரர்

அம்மனின் பெயர் : பாலாம்பிகை

தல விருட்சம் : மாமரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 .மணி முதல் 11. மணி வரை, 
                               மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி : அருள்மிகு  ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்,
 லால்குடி தாலுகா, மாந்துறை- 621 703.
திருச்சி மாவட்டம். Ph: -99427 40062, 94866 40260

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 58வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார்.

* மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.

* திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறை பாடலில் சுவாமியை குறித்து பதிகம் பாடியிருக்கிறார்.

* துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

* இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது..

* பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு..

* அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை. கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.


*  இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: