திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)

அம்மனின் பெயர்: நித்யகல்யாணி

தல விருட்சம் : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 .மணி முதல் 12. மணி வரை, 
                               மாலை 4. மணி முதல் இரவு 7. மணி வரை

முகவரி : அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், 
திருப்பாற்றுறை- 620 005. 
பனையபுரம், திருச்சி மாவட்டம் Ph: 0431 - 246 0455.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 59 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.

* கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின்  இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை "மூலநாதேஸ்வரர்' என்றும், தலத்தை "கறார் கொன்றை' என்றும் பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

* அருகிலுள்ள தலங்கள்: பஞ்சபூத தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், 108 திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கம் ஆகியவை இக்கோயில் அருகில் உள்ளன.

* புத்திரப்பேறு கிடைக்கவும், குழந்தைகள் நல்வாழ்க்கை வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.




முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: