செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : அக்கினீசுவரர், தீயாடியப்பர்

அம்மனின் பெயர்: சௌந்தரநாயகி, அழகம்மை

தல விருட்சம்    : வன்னி, வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோவில், திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் - 613 104 தஞ்சாவூர் மாவட்டம்
Ph: 94423 47433.


கோவில் சிறப்பு :


* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 72 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* மூலவரைச் சுற்றி வரும் பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தெட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர் சன்னதி உள்ளது. உட்சென்றதும் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது - தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். சன்னதி வாயிலில் துவாரபாலகிகள் உள்ளனர். உள் பிரகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சன்னதியாகவுள்ளது. இலிங்கோற்பவரிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் உள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள் உள்ளன.

* நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.

* மாசிமகம் பங்குனிப் பெருவிழாவும் இங்குச் சிறப்புடையன.

* நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு அக்னீஸ்வரம் என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது

* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: