வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அக்னிபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் :  கவுரி பார்வதி

தல விருட்சம்     :    வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7.30 மணி முதல்  இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில், 
அன்னியூர்- 612 201. திருவாரூர் மாவட்டம்.
Ph:0435-244 9578

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 125 வது தேவாரத்தலம் ஆகும்.

* முன்மண்டபத்தில் நால்வர் சன்னதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன. பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன.

* திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: