செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சக்கரவாகேஸ்வரர்

அம்மனின் பெயர்: தேவநாயகி

தல விருட்சம்    :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  8 மணி முதல் 9 மணி வரை, மாலை 
5 மணி முதல் இரவு 7  மணி வரை. 

முகவரி : அரும்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில், சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201.
 தஞ்சாவூர் மாவட்டம்.Ph 04374-311 018

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 80 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

* மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.

* கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும் போது விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

*  மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.

* திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். 



முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: