செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர்  : முல்லைவனநாதர்

அம்மனின் பெயர்: கருகாத்தநாயகி
தல விருட்சம்    :  முல்லை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
மாலை 3 மணி முதல் இரவு 8  மணி வரை.

முகவரி : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்.
www.garbaratchambigaitemple.org
eomullaivananathartkr@gmail.com 
Phone:04374-273423
Mobile:08870058269

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.

* இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம். *கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில்

* சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.

* திருமணம்கூடிவர படிக்கு நெய் மெழுகுதல் :
 திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.அவ்வாறு செய்பவர்களுக்கு திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன.தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர்.

* குழந்தை பாக்கியம் பெற வைக்கும் நெய் :
      திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை.இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும்.

* சுகப்பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய் :
    கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.இது விசேசமானதாகும்.இந்த விளக்கெண்ணெயை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும். இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே, இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: