கோவில் பெயர் : அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோவில்  
சிவனின் பெயர்  : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
அம்மனின் பெயர்: வளவெண்ணகையாள். 
(மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்.)
தல விருட்சம் :    பனைமரம் மற்றும் பாலை, (பாலை இப்போது இல்லை )
கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரை. 
முகவரி : அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோவில், 
திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் - 614 205. தஞ்சாவூர் மாவட்டம்.
Ph: 094435 24410
கோவில் சிறப்பு : 
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இது 82 வது தேவாரத்தலம் ஆகும்.
*  ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட  தலம்..
* பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.
* தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.
* திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
0 Comments: