வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில்



கோவில் பெயர்: அருள்மிகு  தர்ப்பாரண்யேசுவரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்

அம்மனின் பெயர் : தேனாமிர்தவல்லி

தல விருட்சம்     :    வாழை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 1 மணி வரை, 
மாலை 5  மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு  தர்ப்பாரண்யேஸ்வரர், திருக்கோவில்
கும்பகோணம் - காரைக்கால் சாலை ,திருநள்ளாறு - 609 607
Ph:004368) 236530 

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 115 வது தேவாரத்தலம் ஆகும்.

* தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடதநாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புருத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.

* சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: