கோவில் பெயர் : அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : யாழ்மூரிநாதர்
அம்மனின் பெயர் : தேனாமிர்தவல்லி
தல விருட்சம் : வாழை
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு யாழ்மூரிநாதர் தேவஸ்தானம், தருமபுரம் - 609 602, காரைக்கால் புதுச்சேரி.Ph:04368 - 226 616
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 114 வது தேவாரத்தலம் ஆகும்.
* சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார்.பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.
* இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.
* இங்கு ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்து சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் உத்திராட நட்சத்திர தினத்தில் துர்க்கைக்கு அபிஷேகங்கள் செய்து வேண்டுகிறார்கள்
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
0 Comments: