வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் :     அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :     ஐராவதேஸ்வரர்

அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை

 

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 மணி முதல் 11 மணி வரை, 
                                                          மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில், மேலைத்திருமணஞ்சேரி-609 813. 
எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04364-235 487

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 24 வது தேவாரத்தலம் ஆகும்.

* பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது.

* ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால்      கட்டப்பட்டதென்பர்.


* பிரார்த்தனை: பெண்ணைப் பெற்றவர்கள் வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வருகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கிறார்கள். மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது. மருமகனுக்கு வரவேற்பு: இக் கோயிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. இங்கிருந்து 2 கி.மீ., துõரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோயிலுக்கு எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தை யாகப் பாவித்து, பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு, சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று, அம்பிகையை மணந்து கொள்வார். கருணை அம்பிகை: காவிரியின் வடகரையில் அமைந்த இக்கோயிலில்,சிவன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்து அம்பாள் மலர்க்குழல்நாயகிக்கு பெருங்கருணை பிராட்டியார் என்றும் பெயருண்டு. நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்பவர்கள் மீது கருணை கொண்டு, நல்ல வரன் அமைய அருளுபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.

* பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு. திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: