வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்

கோவில் பெயர் :  அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்

சிவனின் பெயர் : உத்வாகநாதர்

அம்மனின் பெயர் : கோகிலா

தல விருட்சம் :   கருஊமத்தை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 மணி முதல் 1.30 மணி வரை, 
                                                   மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி :  அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம். . Ph:04364 - 235 002


கோவில் சிறப்பு :

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

* திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

* இங்கு நவகிரகங்கள் கிடையாது.

* மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.

* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்

* இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.

* ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: