புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : நீலகண்டேசுவரர்

அம்மனின் பெயர் : ஒப்பிலாமுலையாள்

தல விருட்சம்   :  5 இலைவில்வம், பலாமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோவில், திருநீலக்குடி- 612 108, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் - மாவட்டம்.
Ph:0435 246 0660, 94428 61634

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

* இது 95 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர்.ஒப்பில்லா முலை அம்மன்(அனுபமஸ்தினி) திருமணக்கோலத்தில் உள்ளார்.

* இத்தலத்தில் பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.

* இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது.

* இத்தலத்தில் திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

* இத்தலத்தில் ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: