வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   ஆபத்சகாயேஸ்வரர்

அம்மனின் பெயர் : பெரியநாயகி

தல விருட்சம் :    எலுமிச்சை


கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 மணி முதல் 10 மணி வரை, 
                               மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை

திருக்கோவில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் - 609 203. பாண்டூர் போஸ்ட் வழி- நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 250 758



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 22 வது தேவாரத்தலம் ஆகும்.

* இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர்.

* இத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர்.

* ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.

* பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

* வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது         சிறப்பம்சம்.

* சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

*  பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு    சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார்.

* பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: