வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்

கோவில் பெயர் :  அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்

சிவனின் பெயர் :   சோமநாதர்

அம்மனின் பெயர் : வேயுறுதோளியம்மை

தல விருட்சம் :    மகிழம்


கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 மணி முதல் 10 மணி வரை, 
                                                    மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி :  அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் - 609 203. மயிலாடுதுறை தாலுகா. 
நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04364250 424, 250 142,கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 21 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

* பிரகாரத்தில் நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு   மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.

* திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: