வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்))


கோவில் பெயர்   : அருள்மிகு  சற்குணலிங்கேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  அசற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், 

அம்மனின் பெயர் : அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, 

தல விருட்சம்     :    வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 10 மணி வரை, 
                                                    மாலை  5.30 மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோவில், கருக்குடி, மருதாநல்லூர்-612 402 கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். Ph:99435 23852

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 132 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.

* தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: