வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்( ஸ்ரீ வாஞ்சியம்)


கோவில் பெயர்   : அருள்மிகு  வாஞ்சிநாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வாஞ்சிநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் :  அமங்களநாயகி, வாழவந்தநாயகி

தல விருட்சம்     :   சந்தன மரம்.

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                   மாலை  3 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி: அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், 
ஸ்ரீ வாஞ்சியம் - 610 110 திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366 291 305, 94424 03926, 93606 02973.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.

*  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

* மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். 

* பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: