கோவில் பெயர் :அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
அம்மனின் பெயர் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
தல விருட்சம் : வில்வமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 10 .மணி முதல் 11..30 மணி வரை,
மாலை 3.30 மணி முதல் இரவு 5 மணி வரை
முகவரி : அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில் திருக்கானூர், விஷ்ணம்பேட்டை - 613 105 திருக்காட்டுப்பள்ளி வழி,
( திருக்காட்டுப் பள்ளியில் உள்ள குருக்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு)அதன்பின் கோவில் செல்லலாம்.04362-320 067, +91- 93450 09344)
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 56 வது தேவாரத்தலம் ஆகும்.
.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்,அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர்உள்ளனர்.
* திருமணத்தடை உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன்
மனைவியருக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர
0 Comments: