திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆலந்துறையார்(வடமூலநாதர்)

அம்மனின் பெயர் : அருந்தவ நாயகி

தல விருட்சம் : ஆலமரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6. மணி முதல் 12. மணி வரை, மாலை 4. 30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில்(வடமூலநாதர்) 
கோவில்கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 
அரியலூர் மாவட்டம். P h : 99438 82368

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.


* இது 55 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான்.

 * இத்தல சிவனுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

*  முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூதலிங்கங்கள், மகாலட்சுமி, லிங்கோத்பவர், அறுபத்து மூவர், சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னதிகள் உள்ளன.

* பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: