வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர் :  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :  சுந்தரேஸ்வரர்

அம்மனின் பெயர் : அழகம்மை

தல விருட்சம் :     வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 10 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை

முகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை - 609 106. தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். 
Ph:0 93605 77673, 0 97879 29799.


கோவில் சிறப்பு :

*  இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 8 வது தேவாரத்தலம் ஆகும்.

* சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார்.

* கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன், எட்டு கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். பிரகாரத்தில் விஸ்வநாதர்,  அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி  உள்ளது.

* நோய்கள் நீங்க, முன்வினைப் பயன்களால் அனுபவிக்கும் பாவத்தின் பலன் குறைய இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

* இத்தலத்திலிருந்து  6 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு தலம் இருக்கிறது. 
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: