கோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்)
அம்மனின் பெயர் : மதுகரவேணியம்பிகை (குமராயி)
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் : காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்
முகவரி : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில், மோகனூர் - 637 015, நாமக்கல்மாவட்டம்.காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Ph:04286 - 257 018, 94433 57139.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* அம்பிகை மகனை அழைக்க அவர் நின்ற ஊர் என்பதால், "மகனூர்' என்றழைக்கப்பட்ட இத்தலம், "மோகனூர்' என்று மருவியது. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், முருகன் நின்றதாக கருதப்படும் இடத்தில் குன்றின் மீது முருகன் தனிக்கோயிலில் அருளுகிறார்.
* காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.
0 Comments: