கோவில் பெயர் : அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்
சிவனின் பெயர் : கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி
அம்மனின் பெயர் : வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை
தல விருட்சம் : பத்ரி, இலந்தை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் - 611 104. திருவாரூர் மாவட்டம்.Ph: 04366 - 276 733.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 147 வது தேவாரத்தலம் ஆகும்.
* ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய சன்னதி. இரண்டு பிரகாரங்கள். உள்பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. குபேரனுக்கும், முருகப்பெருமானுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* பாவங்கள்,தோஷங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
0 Comments: