வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

அம்மனின் பெயர் :  சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம்     :   மல்லிகை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                         மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில், சிக்கல்-611108. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04365 - 245 452, 245 350.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர். கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோவவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.

* கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: