சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்(இராமேஸ்வரம்)

கோவில் பெயர்   : அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்

அம்மனின் பெயர் : பெரியநாயகி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5 மணி முதல் 1 மணி வரை,
                              மாலை  3 மணி முதல் இரவு 9  மணி வரை.

முகவரி : அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்,
        இராமேஸ்வரம். Ph: 0457 221223
http://www.rameswaramtemple.tnhrce.in/கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* 198 தேவாரத்தலம் ஆகும்.

* ஸ்படிக லிங்க பூஜை:
கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி முடிய பாலாபிசேகம் செய்யப்படுகிறது.

* ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர். 

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்
வ.எண் தீர்த்தங்கள் விபரம் வ.எண் தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம் 12 கெந்தமாதன தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம் 13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம் 14 கங்கா தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம் 15 யமுனா தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம் 16 கயா தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம் 17 சர்வ தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம் 18 சிவ தீர்த்தம்
8 நள தீர்த்தம் 19 சாத்யாமமிர்த தீர்த்தம்
9 நீல தீர்த்தம் 20 சூரிய தீர்த்தம்
10 கவய தீர்த்தம் 21 சந்திர தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம் 22 கோடி தீர்த்தம்


* காசி - ராமேஸ்வரம் யாத்திரை முறை.

* அக்னி தீர்த்தம்:
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.

* இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

* அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

* முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

* பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

* இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது.

* விவேகனந்தரின் வருகை:
விவேகானந்தர் 27 சனவரி 1897இல் சுவாமி நாகநாதரை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உக்டல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார் என்றார்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: