சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஆதிரத்தினேஸ்வரர்

அம்மனின் பெயர் : சினேகவல்லி

தல விருட்சம்   : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை,
                              மாலை  4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்  திருவாடானை-623407.ராமநாதபுரம் மாவட்டம்.Ph:04561 - 254 533.



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* 199 தேவாரத்தலம் ஆகும்.

* சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

* சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: