சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : சொர்ணகாளீஸ்வரர்

அம்மனின் பெயர் : சொர்ணவல்லி

தல விருட்சம்   : கொக்கு மந்தாரை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,
                              மாலை  4 மணி முதல் இரவு 8  மணி வரை.

முகவரி : அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், காளையார் கோவில்- 630 551. திருக்கானப்பேர். சிவகங்கை மாவட்டம்.
Ph:04575- 232 516, 94862 12371.கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* 200 தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.

* சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். சோமேசர் சன்னதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானை மடு. கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: