சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : ரத்தினபுரீஸ்வரர் (மாணிக்கவண்ணர், கரீநாலேசுரர்)

அம்மனின் பெயர் :  மங்களாம்பிகை

தல விருட்சம்     :  காமிய ஆகமம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 12 மணி வரை, 
                              மாலை  6 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோவில், திருநாட்டியத்தான்குடி  திருவாரூர் மாவட்டம்.Ph: 04367 - 237 707, 94438 06496.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 182வது தேவாரத்தலம் ஆகும்.

* கிழக்கு நோக்கிய கோயில், நகரத்தார் திருப்பணி பெற்றது. கிழக்குக் கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சன்னதி மேற்கு நோக்கியுள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரம். உட் பிராகாரத்தில் வழிகாட்டிய விநாயகர், முருகன், விசுவநாதர், கஜலட்சுமி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்கள் தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா ஆகியன. கோட்புலி நாயர் உருவம் உள்ளது. மகாமண்டபத்தில் நடராசசபையும் உற்சவமூர்த்தங்களும் உள்ளன.

* குடும்பத்தில் பிரச்சனை, பிரிக்க முடியாத சொத்துக்கள், பயிர் செழிப்பாக வளர இங்கு பிரார்த்தனை செய்தால் சிறந்த பலன் தரும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: