சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சற்குணநாதர்

அம்மனின் பெயர் :   மங்களநாயகி

தல விருட்சம்     :   வில்வம்
கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, 
                              மாலை  4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில் இடும்பாவனம் - 614 703 , திருவாரூர் மாவட்டம். Ph:4369 - 240 349, 240 200

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 171 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* 3 நிலை ராஜகோபுரத்துடன் மூலவர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், அகத்தியர், இடும்பை, சனிபகவான், கஜலட்சுமி, பைரவர், சந்திரன், லிங்கோத்பவர், துர்க்கை, நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: