சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : வெள்ளிமலைநாதர்

அம்மனின் பெயர் :  பெரியநாயகி

தல விருட்சம்     :   தென்னை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  6 மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில், திருத்தேங்கூர் திருவாரூர் மாவட்டம் - 610 205. Ph:0 4369 237 454, 94443- 54461

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 180 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.

* இது ஒரு சிறிய கோயில். பழமையான கோயில் என்பதால் களை இல்லை. இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும். ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.

* இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: